இளைஞர்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் – பிரதமர் மோடி

21-ம் நூற்றாண்டில் இளைஞர்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்றுள்ளார். 2-வது நாளாக இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவுராவில் உள்ள பெலூர் மடத்தில் நடந்த விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் அவர் பேசியதாவது:

இளைஞர்கள் மீது அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மீது இந்த நாடு எதிர்பார்க்கிறது. கடந்த காலங்களில் இளைஞர்களுக்கு ஏமாற்றம் இருந்தது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இளைஞர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆனால் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அவர்களை வதந்திகள் மூலம் தவறாக வழிநடத்துகிறார்கள்.

இந்த சந்தேகங்களை தெளிவுபடுத்துவது நமது கடமையாகும். குடியுரிமை திருத்த சட்டம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்பதை நான் மீண்டும் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். குடியுரிமை வழங்குவதற்கு தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சிலர் அரசியல் நலனுக்காக அதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். மக்களையும், இளைஞர்களையும் வேண்டும் என்றே தங்களது சுயலாபத்துக்காக திசை திருப்புகிறார்கள்.

குடியுரிமை சட்டம் குறித்து புரிந்துகொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. சி.ஏ.ஏ. பாகிஸ்தானின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது.

100 இந்தியர்களை என்னிடம் தாருங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்று கூறிய சுவாமி விவேகானந்தரை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

மாற்றத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும், ஆற்றலும் நமக்குள் இருக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டில் இளைஞர்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Related posts