வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப்போற்று’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் ‘ரிலீஸ்’ தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்பது குறித்த பட்டியலில் வெற்றிமாறன் உள்பட பலர் இருந்தனர். தற்போது சூர்யாவின் 40-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூர்யாவின் 40-வது படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதாகவும், இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்க இருப்பதையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது தாணு-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர் என்பதும் இந்த கூட்டணியில் சூர்யா தற்போது இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய திரைப்படம்

66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா விக்யான் பவனில் நடைபெற்றது. விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் கலந்து கொண்டார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசும்போது கூறியதாவது:- சினிமாத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றும், விழாவில் கலந்து கொள்ள முடியாத நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். ஆதி காலம் முதல் பெண்களுக்கு மரியாதை அளிப்பது தான் நமது கலாச்சாரம். அனைத்து விதங்களிலும் பெண்களை முன்னிறுத்தி போற்றி வருகிறோம். சினிமா துறைகளிலும் பலர் சாதனை படைத்து வருகின்றனர். நதிகள், கல்விக் கடவுள் ஆகியவற்றிற்கும் பெண்களின் பெயர்களை வைத்து வழிபடுவது நமது கலாச்சாரம். பெண்களை மதிக்க வேண்டும் என இளைய சமுதாயத்திற்கு நாம்…

சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ்

66-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயா்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டாா். சிறந்த தமிழ் படமாக 'பாரம்' தேர்வானது. சிறந்த ஹிந்தி படமாக 'அந்தாதுன்' தேர்வானது. கீர்த்தி சுரேஷ் நடித்த 'மகாநடி' படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றது. தேசிய விருது வழங்கும் விழா விக்யான் பவனில் நடைபெற்றது. விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் பங்கேற்றார். சிறந்த நடிகைக்கான…

இன்றைய முக்கிய இந்திய செய்திகள் 23.12.2019 திங்கள் காலை

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று மாயாவதி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன. உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் 15 பேர் பலியாகினர். இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி வன்முறைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ள மாயாவதி, உத்தர பிரதேசத்தில் நடந்த வன்முறை தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தி அப்பாவிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.…

இலங்கை : சீரற்ற காலநிலை 65,316 பேர் பாதிப்பு!

நாட்டில் கடந்த 03 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 9.00 வரையான காலப் பகுதியில் தொடரும் சீரற்ற நிலைக் காரணமாக உண்டான அனர்த்தங்களினால் 13 மாவட்டங்களில் 19,072 குடும்பங்களைச் சேர்ந்த 65, 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்தும் ஒருவர் காணாமல்போயும் உள்ளனர். அத்துடன் 62 வீடுகள் முற்றாகவும், 1463 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் 5,277 குடும்பங்களைச் சேர்ந்த 17,776 போர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, கண்டி, அம்பாறை, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, குருணாகல், புத்தளம், கேகாலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.