கதாநாயகன் ஆனது ஏன்? -நடிகர் சூரி

வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரியை புரோட்டா காமெடி பிரபலமாக்கியது. கதாநாயகர்களாக மாறிய நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமனி, வடிவேல், விவேக், கருணாஸ், சின்னி ஜெயந்த், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு வரிசையில் இப்போது சூரியும் சேர்ந்து இருக்கிறார். வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரியை புரோட்டா காமெடி பிரபலமாக்கியது. அதன்பிறகு காமெடி வேடங்கள் குவிந்தன. முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து மளமளவென உயர்ந்தார். இப்போது புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். கதாநாயகன் ஆனது குறித்து சூரி அளித்த பேட்டி வருமாறு:- “நான் சினிமாவில் அறிமுகமான போது பெயின்டர் வேலை செய்து கொண்டு இருந்தேன். அதன்பிறகு பல படங்களில் சிறுசிறு வேடங்களில் வந்தேன். இதுவரை 60 படங்களில் நடித்து விட்டேன். 3, 4 வருடங்களாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள்…

தெலுங்கர்கள் இல்லை என்றால், தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும்

தெலுங்கர்கள் இல்லை என்றால், தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும் என்றும் தாம் தெலுங்கர் என்பதில் பெருமை கொள்வதாகவும் நடிகர் ராதாரவி கூறினார். நடிகர் எம்.ஆர்.ராதாவின் 40-வது ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி பேசும்போது கூறியதாவது;- தமிழகத்தின் வளர்ச்சிக்கு தெலுங்கர்களின் பங்களிப்பு அளப்பறியது. தெலுங்கர்கள் இல்லை என்றால், தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும். தாம் தெலுங்கர் என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ் சினிமாவில் பாதிக்கும் மேற்பட்டோர் தெலுங்கர்களே உள்ளனர். திராவிட இயக்க வளர்சிக்காக பாடுபட்ட எனது தந்தை எம்.ஆர்.ராதாவை, அந்த இயக்கங்களில் மறந்துவிட்டனர் என்றும் தமது இனத்தை சேர்ந்த தெலுங்கர்கள் தான் அவரை நினைவுகூர்ந்து விழாக்கள் எடுப்பதாகவும் கூறினார். ராதாரவியின் தமிழர், தெலுங்கர் பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ராதாரவியின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து…

2,600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்

நகர நாகரீகத்தின் தோற்றத்தையும் தமிழக சங்ககாலத்தையும் மேலும் 300 ஆண்டுகள் பழமையாக்கியுள்ள கீழடி நான்காம் கட்ட அகழ்வாய்வின் முடிவுகள் உலகமக்களுக்கு வியப்பையும் தமிழருக்கு பிரமிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. மதுரைக்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் உறங்கிக்கிடந்த தென்னந்தோப்பில்தான் 2014 ஆண்டு வரை புதைந்திருந்தது தமிழர் நகர நாகரீகம். வறட்சியால் விளையாட்டு மைதானமாக மாற்றம் பெற்ற தென்னந்தோப்பில் செங்கல் சூளைக்கு மணல் எடுப்பதற்காகத் தோண்டியபோது தென்பட்ட செங்கல் சுவரில் ஆரம்பமானது தமிழரின் புதிய வரலாறு. 2014 ஆம் தொடக்கம் இதுவரை ஐந்து கட்டங்களாக இந்தியாவின் மத்திய தொல்லியல் துறை அகழ்வாய்வில் ஈடுபட்டுவருகின்றது. இதன் முதலாம் கட்ட ஆய்வில் கிடைத்த தொல்லியல் சான்றுகளுக்கு அமைவாக, இப் பகுதியில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்…

கூட்டமைப்பு செய்தவைகளை கூட எமது அமைச்சர்கள் செய்யவில்லை

அரசாங்கத்தில் பதவிகள் வகித்தும் பங்காளிகளாக இருந்தும் முஸ்லிம் சமூகம் முகம் கொடுக்கின்ற பழைய பிரச்சினைகளுக்கும் புதிய நெருக்கடிகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை நீடிப்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தும் கொடுத்தும் ஆதரவளித்தும் செயலாற்றுவது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளும் முஸ்லிம் சமூகமும் சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தரப்பு ஆசனத்தில் அமர்ந்து தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள சேவைகளில் ஒரு பங்கைக்கூட ஆளுங்கட்சி அமைச்சர்களாக பதவி வகித்து சமூகத்திற்கு ஆற்றியதாகத் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, ‘நெருக்கடிகள் அதிகரித்து கொண்டு செல்கின்ற அதேநேரம், இருந்துவரும் பிரச்சினைகளும் தீர்க்கப்படாது…

யுத்தம் முடிந்தும் நிம்மதியில்லை; அரசுகள் தலைகுனிய வேண்டும்

வடக்கில் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராடுகின்றனர். அதேபோல தென்னிலங்கையில் போரில் முன்னின்று போராடி அங்கவீனமான இராணுவத்தினர் ஓய்வூதியம் வழங்கவில்லை என போராடுகின்றனர். அப்படியானால் இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்த பின்னர் ஆட்சி நடத்திய அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டும். அவர்களால் நாட்டு மக்களை நிம்மதியாக வாழ வைக்க முடியாது என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஜே.வி.பி கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டினை ஆண்டு வரும் ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் மதவாதத்தையும் இனவாதத்தையும் வளர்த்து வருகின்றனர். கடந்த 2009 ஆண்டு உள்நாட்டு போர் முடிவடைந்தது. அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டினை ஆட்சி செய்தார்.அப்போது வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு யாரும் போராட முன்வரவில்லை.…

யார் எதைக் கூறினாலும் தேர்தலில் களமிறங்குவேன்

யார் என்னதான் கூறினாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகெடிய பிரதேச செயலகப் பிரிவில் முலன்யாய கிராமத்தில் நிர்மாணித்த மாதிரிக்கிராமங்களை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இன்று ஊடகங்களை அவதானித்தால் அனைவருடைய கேள்வியும் சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா என்பதாகும். யார் என்னதான் கருத்துக்களை தெரிவித்து முட்டுக்கட்டைகளை போட்டாலும் நான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கட்டாயமாக போட்டியிடுவேன் என்பதை அவர்களுக்கு தெரிவித்துக் ெகாள்கிறேன். எமது நாட்டிலுள்ள சகல மக்கனினதும் இன, மத,மொழி மற்றும் கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து மக்களினதும் ஆசீர்வாதத்துடனும் ஆதரவுடனும் நான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவேன். இது மாத்திரமன்றி இவர்களது…

பிரச்சினைகளுக்கு கோட்டாபய தீர்வை வழங்க மாட்டார்

பிரதான கட்சிகள் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினையை கண்டுக்கொள்ள தவறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (22) இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாம் இன்று வாழ்வதற்கு உகந்த நாடொன்றில் வாழவில்லை என தெரிவித்தார். மக்கள் எதிர்காலம் தொடர்பான பயத்தில் வாழ்கின்றனர். ஒவ்வொரு மனங்களிலும் பிரச்சினைகள் நிரம்பி வழிகின்றது அவற்றுக்கு கோட்டாபய ராஜபக்ஷ தீர்வை வழங்க மாட்டார். அதேபோல் ஐ.தே.கவுக்கு வாக்களிப்பதால் இந்த நிலைமை மாறபோவதில்லை. அவர்கள் கடந்த நான்;கரை வருடங்களாக எதேனும் ஒன்றை செய்திருந்தால் மீண்டும் அதிகாரத்தை கேட்க அவசியம் இல்லை. அந்த கட்சி மீண்டும் நாட்டை கட்டியெழுப்பும் முறை தொடர்பில் கதைபதற்கில்லை. அவர்கள் வேட்பாளர் குறித்தே தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.…

எவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை

எவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் அவர்களை விடுதலை செய்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார். எவன்கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் 7 பேர் விடுதலை செய்யப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டெம்பர் 12 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது. எனினும், அது தொடர்பான ஆவணங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அதனால் வழக்கினை இன்றைய தினம் (23) வரை ஒத்திவைப்பதாகவும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. இதன்போது, பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஷ சார்ப்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த வழக்கு இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்துள்ள முறை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு…