விஞ்ஞானிகள் அதிகமாக கவலைப்பட வேண்டாம்..

சந்திரயான் -2 விண்கலம் செலுத்தப்பட்டதன் நோக்கம் 95 சதவீதம் நிறைவேறியுள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான மாதவன் நாயர் கூறியுள்ளார். சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண,கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, 'இஸ்ரோ' கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதை காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு பெங்களூரு வந்தார். அவருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ - மாணவியரும் பெங்களூரு வந்தனர். சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், இன்று அதிகாலை,…

பாஜகவுக்கு தலைமை நிராகரித்த ரஜினிகாந்த்.

பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுக்கப்பட்ட அழைப்பை ரஜினி நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வேகமெடுக்கிறது நடிகர் ரஜினியின் புதுக்கட்சி பணிகள்... தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த கோரிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுத்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார். அப்போது தான் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை வெளியிட்டு, 1½ ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் எந்த முடிவையும் அறிவிக்காமல் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு மவுனத்தையே பரிசாக தந்தார்.…

’சந்திரயான்- 2’ விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கவில்லை

சந்திரயான் 2 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கியபோது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எந்தவித சிக்னலும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் ஆறுதல் கூறும் வகையில் உரையாற்றினார். ’சந்திரயான்- 2’ விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வெளிநாட்டு தலைவர்களும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். பூடான் பிரதமர் லோட்டே ஷேரிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “நாங்கள் இந்தியாவையும், இந்திய விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறோம். சந்திரயான்-2 கடைசி நிமிடத்தில் சவால்களை எதிர்கொண்டது. எனக்கு நரேந்திர மோடியை…

வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை நாங்கள் மீட்டெடுப்போம்

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வேட்புமனுத்தாக்கலுக்கு முன்பதாக தேசிய மக்கள் சக்தியின் பிரசாரம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதன்படி 'வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை நாங்கள் மீட்டெடுப்போம்' என்ற தொனிப்பொருளில் அநுராதபுரத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ள பிரசாரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்பார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: நாடு தற்போது அனைத்துத் துறைகளிலும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருப்பதுடன், மோசமானதொரு நிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இனியும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் நம்பிக்கை வைப்பதன் மூலம் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது. இதிலிருந்து நாட்டை…

பன்னிரண்டு கட்சிகள் போட்டியிடப்போவதாக ஆணையருக்கு அறிவிப்பு

2 அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த தீர்மானித்துள்ளதாக தனக்கு அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று மாலை தெரிவித்தார். இந்த 12 அரசியல் கட்சிகளில் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். இதுதவிர இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக தனக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த எழுத்து மூல ஆவணங்களை பெற்றுக் கொண்ட போதும், வேட்புமனுவுக்குரிய காலம் அறிவிக்கப்பட்டதன் பின்னரே அவற்றுக்குரிய விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கப்படும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அரசியல் கட்சிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டு கோள்களுக்கிணங்கவே 12 அரசியல் கட்சிகளும் தமக்கு அறிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.செப். 15 விசேட அறிவிப்பு இதேவேளை, உலக ஜனநாயக தினமான செப்டம்பர் 15 ஆம் திகதி முக்கியமான அறிவித்தலொன்றை வெளியிடவிருப்பதாக…

யாழ்ப்பாண மாநகர மண்டப கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

யாழ்ப்பாண மாநகர மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07) நாட்டி வைத்தார். 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மாநகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா யாழ்.மாநகர முதல்வர் இ . ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்றது. இவ்வாறு அமையவுள்ள குறித்த மண்டபத்திற்காக 2019 ஆம் ஆண்டில் 750 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமனற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த . சித்தார்த்தன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட் செயலர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன், நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக பிரதமர் தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நாளை (08) அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இடம்பெறும் சந்திப்பில், சஜித் பிரேமதாச எவ்வித விட்டுக்கொடுப்புகளும் செய்யமாட்டார் என தகவல்கள் வௌியாகியுள்ளன.