2ம் மொழி கற்கை நிலையம் அச்சுவேலியில்

இந்து பௌத்த கலாச்சார பேராவையினால் 2ம் மொழி கற்கை நிலையம் அச்சுவேலியில் திறந்து வைக்கப்பட்டது.

பாரளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தினதேரர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கற்கை நிலையத்தினை திறந்து வைத்தார்.

பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட அத்துரலியதேரர் அச்சுவேலி புனிததெரேசாள் மகளீர் கல்லூரியில் இருந்து மேளதாளங்கள் முழங்க மங்கள வாத்தியங்களுடன் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

தொடந்து இந்து பௌத்த கலாச்சார பேரவையின் தலைவர் என்ற வகையில் அத்துரலிய ரத்தினதேரர் இந்த ஆரம்ப நிகழ்விற்கு கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்து கலாச்சாரபேரவையின் வடமாகாண தலைமைக்காரியாலயமாக இந்த நிலையம் தொடந்து விளங்கும் என்பதுடன், எதிர்வரும் காலத்தில் வடமாகாணத்தில் உள்ள ஏணைய மாவடங்களிலும் திறந்து வைக்கப்படவுள்ளது.

இன்று திறந்து வைக்கப்பட்ட இந்த நிலையத்தில் சிங்களம், மற்றும் ஆங்கில மொழிகற்றை மாணவர்கள் இலவசமாக கற்கமுடியும்.

குறிப்பாக இதுவரை காலமும் குறித்த நிலையம் ஊடாக 15ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு பயண்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts