176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: கர்டினல் ரஞ்சித்

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. ஆனால் இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (என்.டி.ஜே.) மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது.

இலங்கை குண்டுவெடிப்புகளில் 258 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் மால்கோல்ம் ரஞ்சித் கூறியதாவது:- “இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த குழந்தைகள் இயல்பு நிலையை எட்டுவதற்கான பணிகளில் தேவாலயம் கவனம் செலுத்துகிறது” என்றார்.

கடந்த வாரம் ரோம் சென்றபோது கர்டினல் ரஞ்சித் இந்த தகவலை தெரிவித்ததாக இலங்கையில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts