15 மாநிலங்களில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத காங்கிரஸ்

இந்திய தேர்தல் முடிவுகளில், 15 மாநிலங்களில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல், காங்கிரஸ் கட்சி தோற்றிருப்பது அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

பா.ஜ., 300 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 348 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி வெறும், 52 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. ஆனால், மொத்தமுள்ள 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில், 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

அருணாச்சலபிரதேசம், இமாச்சல்பிரதேசம், திரிபுரா, குஜராத், மணிப்பூர், அரியானா, ராஜஸ்தான், டில்லி, ஆந்திரா, தெலுங்கானா, மிசோரம், ஒடிசா, அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள் மற்றும் தாத்ரா நாஹர் ஹவேலியில் காங்கிரஸ் கணக்கையே தொடங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இது, ஏற்கனவே பா.ஜ., முழங்கி வந்த ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்னும் இலக்கை நோக்கி செல்வதாக பா.ஜ., தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Related posts