நவாஸ் ஷெரீஃபின் உடல் நிலை பாதிப்பு

பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் சிறைக்குள் இருதய நிபுணர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவரது மகள் மரியம் நவாஸ் குற்றம்சாட்டியுள்ளார். லண்டனில் சொத்துக்கள் வாங்கியது தொடர்பான வழக்கில், நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் உள்ளிட்டோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் அல் அஜீசியா உருக்காலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ் ஷெரீஃப் லாகூர் சிறையில் உள்ளார். இந்நிலையில் சிறையில் சென்று அவரைப் பார்த்த அவரது, மகள் மரியம் நவாஸ் தனது தந்தையின் உடல் நிலை சிக்கலானது என்றும் அவரை பரிசோதிக்க அவரது பிரத்யேக மருத்துவர்கள் சிறைக்குள் அனுமதிக்கபடவில்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் சிறை மருத்துவர்கள் நவாஸ் ஷெரீஃபை பரிசோதித்ததாகவும் அவர் நலமாகவே இருப்பதாகவும் சிறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் நடிக்க கதிர் ஒப்பந்தம்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள 'தளபதி 63' படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் அரங்குகள் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளார் கலை இயக்குநர் முத்துராஜ். அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு நடிப்பது மட்டுமே முடிவாகி இருந்தது. இவர்களோடு மேலும் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2018-ல் வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர் கதிர். 'விக்ரம் வேதா' படத்தில் மாதவன், விஜய் சேதுபதி ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்படத்தில் விஜய்யுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இதனை அதிகாரபூர்வமாக தயாரிப்பு…

பேட்ட படத்துக்கு வரவேற்பு: விநியோகஸ்தரின் வாழ்த்து

பேட்ட' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், விநியோகஸ்தர் அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு ரஜினி பதிலளித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 'பேட்ட' படத்துக்கு மக்களிடையே கிடைத்த ஆதரவு தொடர்பாக பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம், "சார். திருப்பூர் சுப்பிரமணியம் பேசுறேன். ரொம்ப அருமையான படம் சார். ஆடியன்ஸ் ரொம்ப நல்லா ரசிக்கிறாங்க. நல்ல ஒரு பெரிய ஹிட்டான படம். பொங்கலுக்கு ரொம்ப நல்ல படம் கொடுத்துருக்கீங்க. வாழ்த்துகள் சார்" என்று ரஜினிக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ செய்தி அனுப்பியுள்ளார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக ரஜினி, "ரொம்ப நன்றி திருப்பூர் சுப்பிரமணியம் சார். ரொம்ப…

குழந்தை வந்தவுடன் நம் வாழ்க்கையே மாறி விடுகிறது

சமீபத்தில் தாயான பிரபல நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, குழந்தை வந்தவுடன் நம் வாழ்க்கையே மாறிவிடுகிறது என்று தெரிவித்துள்ளார். 32 வயதான சானியா மிர்சா, சமீபத்தில் குழந்தைக்கு தாயானார். குழந்தைக்கு இசான் மிர்சா மாலிக் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 6 முறை கிராண்ட் ஸ்லாம்களை வென்ற சானியா, மீண்டும் தனது டென்னிஸ் பயிற்சியை ஆரம்பித்துள்ளார். கண்காட்சி ஒன்றில் இதுகுறித்துப் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ''இத்தனை நாள் வரை மனைவியாக இருந்தேன். இப்போது தாயாகி உள்ளேன். டென்னிஸில் மீண்டும் முதலிடத்துக்குத் திரும்ப முயற்சிக்கிறேன். அது அத்தனை எளிதான காரியமல்ல என்று எனக்குத் தெரியும். ஆனாலும் முயற்சிப்பேன். ஒரு குழந்தை வீட்டுக்கு வந்தால் நம் வாழ்க்கையே மாறி விடுகிறது. அங்கு உங்களுக்கு முன்னுரிமை இருக்காது. உங்களுக்கு அங்கு வேலையில்லை. எல்லாமே குழந்தையைப் பற்றித்தான். அப்போது உங்களின் வாழ்க்கையே…

அரசியலமைப்பை நிறைவேற்ற பொதுத் தேர்தல் அவசியம் இல்லை

சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் தீர்மானிப்பர் அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்காக பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் அரசியலமைப்பு, சர்வஜன வாக்கெடுப்பின் போது மக்களால் அனுமதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்பதால் இந்த நோக்கத்துக்காக பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர் கூறினார். அத்துடன், புதிதாக தயாரிக்கப்படும் அரசியலமைப்பானது பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளின் ஒப்புதல் மாத்திரமன்றி சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகள் கைவிடப்படுமாயின் அது நாடு எதிர்நோக்கக் கூடாத மோசமானதொரு யுகத்தின் ஆரம்பமாக அமைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார். நேற்றையதினம் நடைபெற்ற அரசியலமைப்பு சபையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் இந்தக் கருத்துக்களை…

மகிந்த பாராளுமன்றத்தில் ஒரு வேடம் விகாரையில் ஒரு வேடம் பூணும் ஒருவர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பு திருத்தம் சம்பந்தமாக விஹாரைகளில் கூறும் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தையே பாராளுமன்றில் கூறுவதாக தபால் மற்றும் முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் கூறியுள்ளார். இன்று கண்டி மாவில்மட பிரதேசத்தில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக கூடிய சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையும் வழங்கி செயற்படுவதாக மிகவும் தௌிவாக கூறினார். இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்குமாறும், மதங்களுக்கு இடையில் பேதம் ஏற்படும் வகையில் செயற்பட கூடாது என்றும் கூறினார். அதற்கு பிரதமர் உடன்பட்டதாகவும், பாராளுமன்றத்தில் கூறுவது போன்று அவர் செயற்பட்டால் நாட்டுக்கு மேலும்…