வண்ணமகள் வாடாது இருக்கட்டும் அஞ்சலி ..

வண்ணமகள் பெற்றெடுத்த வண்ணத்துப்பூச்சியே ! விண்ணுலக பூக்கள் தேடி விரைவாய் பறந்ததேன் ? கண்ணான கணவன் கலங்கியே தவிக்க.. கதிகலங்கிய அன்பு பிள்ளைகளோ அம்மா என்றே ஆசையுடன் தேட.. அதற்குள் பறந்த அவசரம்தான் என்ன?ஆர்க்கெடுத்துரைப்பேன் ஆறுதல்..! உன் வீடு வந்தால் விளக்கேற்றிய ஒளி பகலிலும் பட்டுத் தெறிப்பதேன் என்று எண்ணுவேன்..! சிலவேளை தெய்வங்கள் மனித வடிவில் வருவதுண்டென படித்த கதையை உன் முகத்தில் படிப்பேன்..! விளக்கமின்றி வீடு வந்து சேர்வேன் ! தமிழ்ப் பண்புடன் வரவேற்கும் தாயாய் திகழ்ந்தாய் ..! எந்த கேள்விக்கும் தயக்கமின்றி பதில் தந்தாய் ..! தரணியாளும் வல்வை முத்துமாரி அருள்பெற்றாய் ! ஆர்க்கெடுத்தரைப்பேன் இதை ! உன்னை ஏன் அனுப்பினாள் .. ? ஏன் உடன் அழைத்தாள் ? என்ற அன்னையின் கணக்கை அறிந்தவர் யார்? சின்ன வயதுதான் ஆனால் வண்ண வண்ணமாய்…

விஷாலை கொலை செய்வேன்… வரலட்சுமி தடாலடி

சர்கார், சண்டைக்கோழி-2 போன்ற படங்களில் வில்லியாக நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் ஒன்றில் கலந்து கொண்டார். அவ்விழாவில் அவருக்கு வில்லி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனயைடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம், ஒருவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும், ஒருவரைக் கொலை செய்ய வேண்டும், ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் உங்கள் சாய்ஸ் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. கேள்விக்கு பதிலளித்த நடிகை வரலட்சுமி 'சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன், விஷாலை கொலை செய்வேன் மற்றும் யாராவது ஒருவரை திருமணம் செய்வேன்' என்று கூறினார்.

பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள அஜித்தின் ‘விஸ்வாசம்’

பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்கள் வெளியானது. அஜித்குமார் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சிவா டைரக்டு செய்துள்ளார். ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் படங்கள் இவர்கள் கூட்டணியில் வந்தன. 4-வது முறையும் இணைந்ததால் விஸ்வாசம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இதனால் அஜித்குமார் தோற்றங்களை அடுத்தடுத்து வெளியிட்டு வந்தனர். அந்த படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கினார்கள். தொடர்ந்து படம் பற்றிய விஷயங்களை அறிய காத்திருந்த ரசிகர்களுக்கு ‘அடிச்சு தூக்கு’ என்ற பாடலை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்தனர். இது குத்துப் பாடலாக இருந்தது. அஜித் கம்பீரமாக நடனம் ஆடினார். “செம சீனா சிதற வைக்கனும் பாத்தா பதற வைக்கனும் அப்பதாண்டா நீ என் ஆளு, மங்காத்தா கட்டைபோல இந்த வட்டாரம் நம்ம…

சாதனை படைக்குமா ’லயன் கிங்’ ரீமேக்?

லயன் கிங்’ - 1994-ஆம் ஆண்டு வெளியான டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படம். ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. கார்ட்டூன் எனப்படுகிற 2டி அனிமேஷன் படமாக வெளியானது. அந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பட்டத்தைப் பெற்றது. 2 ஆஸ்கர்களை வென்றது. நாயகன் சிம்பாவின் நண்பர்கள் டிமொன், பும்பா இருவருக்குமான தனி ரசிகர் பட்டாளம் ஒன்று உருவானது. ’லயன் கிங்’ பார்த்து வளர்ந்த 90’ஸ் கிட்ஸ் மத்தியில் ஹகுனா மடாடா (ஆப்ரிக்க மொழி வாசகம், ’கவலை இல்லை’ என்று பொருள்) என்ற வாசகம் பிரபலமானது. இன்றைய அனிமேஷனில் எவ்வளவு முன்னேற்றங்கள், தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும், பாரம்பரிய அனிமேஷன் முறையான 2டி அனிமேஷனில் உருவான ’லயன் கிங்’ படமே ஆகச்சிறந்த அனிமேஷன் படம் என்று சொல்பவர்களும் உள்ளனர். இப்படி ’லயன் கிங்’ படத்துக்கு திரையுலக…

அணு ஆயுத அழிப்பு நிறுத்தபடும் வடகொரியா

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் அணுஆயுத அழிப்பு நிறுத்தபடும் சூழல் ஏற்படும் என வடகொரியா மிரட்டியுள்ளது. இதுகுறித்து வடகொரியா தரப்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,‘‘வடகொரியாவுடனான உறவில் நட்புறவை பேணுவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகள் பாராட்டிக் கூடியவை. ஆனால் வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இதன் மூலம் அணுஆயுதம் உற்பத்தி செய்வதை வடகொரியா கைவிடும் என்று அமெரிக்கா நினைத்தால் இது அமெரிக்காவின் தவறான கணிப்பாகும். மேலும் இது எங்களுடைய ஆணுஆயுதங்களை அழிப்பிற்கான பாதைக்கு நிரந்தர தடையை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல் தொடர்பாக வடகொரியாவின் மூன்று அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியிருந்தது. பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட வடகொரிய அதிகாரிகளில் அந்நாட்டு அதிபர் கிம்முக்கு நெருக்கமானவரான சோ ராயிங் ஹேவும்…

சென்னையில் 80 பெண்களை வன்புணர்வு செய்த ஐ.டி இளைஞர் கைது

சென்னையில் இரவு நேரத்தில் திருப்புளி மூலம் வீடுகளின் கதவைத் திறந்து பெண்களை பாலியல் வல்லுறவு செய்து அதைப் காணொளியாக பதிவு செய்து மிரட்டி நகைகளை கொள்ளையடித்த இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது என்று தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. விசாரணையில் 80 பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததை அவர் ஒப்புக்கொண்டார் என்கிறது இந்த செய்தி. அம்பத்தூர் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதாகவும் நகைகள் திருடப்படுவதாகவும் காவல்துறைக்கு தொடர்ந்து தகவல்கள் வந்தன. ஆனால் பலரும் நகை திருட்டு குறித்து மட்டும் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஆவடியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் அறிவழகன் இந்த சம்பவங்களில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணமாகாத இந்த இளைஞர் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அங்கே தனியாக இருக்கும் வீடுகளில் பெண்களை…

பிரதமர் வேட்பாளராக ராகுல் திருமாவளவன்

திமுகவைத் தொடர்ந்து பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை வழிமொழிவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை: “2019 பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்மொழிகிறேன்’ என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் முன்மொழிந்திருப்பது வரலாற்றுச் சிறப்புக்குரிய ஒன்றாகும். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழிமொழிந்து, வாழ்த்தி வரவேற்கிறோம். சனாதன சக்திகளை வீழ்த்தி ராகுல்காந்தி பிரதமராக்குவதற்கு செயலாற்றுவோம் என உறுதியேற்கிறோம். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற சோனியாகாந்தி, ராகுல்காந்தி, ஆந்திரா, கேரளா, புதுவை ஆகிய மூன்று மாநில முதலமைச்சர்கள் மற்றும் தோழமை கட்சித் தலைவர்களின் முன்னிலையில் திமுக தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டது பொருத்தமானதாகும். காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்று ஓராண்டு முடிந்த நிலையில் அவருடைய பணிகளைப் பாராட்டி பரிசளிப்பது போல் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடியின்…

ஜனாதிபதியின் கூற்று நல்லிணக்கத்திற்கு எதிரானது

முதலில் யுத்தக் குற்றமிழைத்த இராணுவத்தினரை இனங்கண்டு, சட்டத்தின் முன் நிறுத்திய பின்னர் அவர்களை விடுதலை செய்வதா, இல்லையா என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சந்திவேல் தெரிவித்தார். இதேவேளை, யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இராணுவ வீரர்களைக் காட்டிக்கொடுக்க முடியாது. யுத்தத்தின் போது இரு தரப்பிலும் தவறுகள் நிகழ்ந்தன. எனவே அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமாயின், யுத்தக்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான இராணுவ வீரர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்து இன நல்லிணக்கத்துக்கு எதிரான கூற்று என்றே கருத வேண்டியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமராக பதவிப்பிரமாணம் வழங்கிய பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுத்த காலகட்டத்தில் இராணுவத்தினர் தவறிழைத்திருந்தாலும், அவர்களை விட தவறிழைத்த விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் சுதந்திரமாக இருக்கின்றனர். இவ்வாறான நிலைமையில் இராணுவத்தினரை மாத்திரம் தண்டிக்க…

புதிய அமைச்சரவை இன்று (17) பதவிப் பிரமாணம்

புதிய அமைச்சரவை இன்று (17) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவையில் 30 பேர் மட்டுமே அங்கம் வகிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. புதிய அமைச்சரவை பதவியேற்ற பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் நிலையான நண்பன் ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் நிலையான நண்பன் என்ற வகையில், நாங்கள் இலங்கையினது அரசியல் நெருக்கடிக்கும் அதனது அரசியல் யாப்புக்கும் இணைவாக எடுக்கப்பட்ட அமைதியான, ஜனநாயக ரீதியான தீர்மானத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று (17) அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஐரோப்பிய ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையினது ஜனநாயக நிறுவனங்களின் மீளெழுதலை போற்றுவதுடன் தொடர்ந்தும் இலங்கையினது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் அதன் செழிப்பிற்குமான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.