அலைகள் உலக செய்திகள் 12.06.2018 செவ்வாய்க்கிழமை

வடகொரிய அதிபர் அமெரிக்க அதிபர் பேச்சு.. நடந்த விவகாரங்கள், பின்னணிகள் பற்றிய சிறப்பு மலர்.. அனைத்தையும் மற்றவர்களுக்கு முன்னரே தருவது அலைகள்.. நம்பவில்லையா.. கேட்டுப்பாருங்கள்.. அலைகள் 12.06.2018 செவ்வாய்

மக்களுக்கு சேவை செய்ய பதவி தேவை இல்லை

நடிகர் விஷால் ஆந்திரா சென்று விசாகப்பட்டினம் மாவட்டம் அச்சிதாபூரில் ஊனமுற்றோருக்கான பள்ளியில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை திறந்து வைத்தார். பின்னர் அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை அளித்தது. இது அரசு எந்திரத்தின் தோல்வியையே காட்டுகிறது. உளவு துறையும் சரியாக செயல்படவில்லை. 144 தடை உத்தரவை நேர்த்தியாக கையாளவில்லை. இதனால்தான் மக்கள் பலியான துயர சம்பவம் நடந்துள்ளது. விவசாயிகள் நலனை பாதுகாப்பது எல்லோருடைய கடமையாக இருக்கிறது. எனது படங்களுக்கு வசூலாகும் வருவாயில் ஒரு சதவீதத்தை விவசாயிகள் நலனுக்காக வழங்கப் போகிறேன். சினிமாவில் இருக்கும் காலம் வரை இந்த பணியை தொடர்ந்து செய்வேன். என்னுடைய இந்த எண்ணத்தை அமல்படுத்த தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளனர். டிக்கெட் வாங்கி தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ஒவ்வொருவருமே இந்த சேவையில் பங்கெடுத்தவர்கள்…

ரஜினிகாந்த் படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை

அரசியல் கட்சியை தொடங்கும் அவசரத்தில் இருக்கும் ரஜினிகாந்த் அதற்கு முன்பாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்குக்கு சென்று முகாமிட்டுள்ளார். அங்குள்ள கல்லூரி ஒன்றில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. துணை நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களும் அங்கு திரண்டு இருக்கிறார்கள். 30 நாட்கள் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிக்க இருப்பதாகவும் அதன்பிறகு வேறு இடத்துக்கு படப்பிடிப்பு மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இது அரசியல் படமா? எல்லைப்பகுதியில் படப்பிடிப்பு நடப்பதால் தீவிரவாதிகளுடன் ரஜினிகாந்த் மோதி அழிக்கும் கதையா? வழக்கமான தாதா கதைதானா? என்றெல்லாம் கேள்விகளும் யூகங்களும் கிளப்பட்டு வருகின்றன.…

காலா படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம், படப்பிடிப்பு தொடங்கியது முதல் ரிலீஸ் வரை பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது. அந்த எதிர்ப்புகளே படத்தின் மீதான எதிர்பார்ப்பினை எகிற செய்தது. இந்த நிலையில் காலா தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி 650-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், அதே நேரத்தில் உலக அளவில் 2,500 திரையரங்குகளிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தேவராஜன் என்பவர் சினிமா கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கூடுதல் சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தியேட்டர்களில் கூடுதல் சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி ஒரு…

ஜெயகாந்தன் குறித்த கட்டுரை வைரமுத்து இன்று அரங்கேற்றம்

கவிஞர் வைரமுத்து, ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார். தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றம் செய்கிறார். இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், மறைமலையடிகள், உ.வே.சாமிநாதய்யர், பாரதியார், பாரதிதாசன், கருணாநிதி, கண்ணதாசன், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து வைரமுத்து கூறும்போது, ‘‘இந்தியாவின் உயர்ந்த இலக்கியப் பரிசு என்று கருதப்படும் ‘ஞானபீடம்’, இதுவரை தமிழுக்கு 2 முறைதான் வழங்கப்பட்டிருக்கிறது. அகிலனுக்குப் பிறகு ‘ஞானபீடம்’ பரிசு பெற்ற எழுத்தாளர் ஜெயகாந் தன் ஆவார். . ‘தமிழாற்றுப்படை’ வரிசையில் சேர்வதற்கு ஜெயகாந்தனுக்கு தகுதி உண்டு. விளிம்புநிலை மக்களின் வாழ்வை, வலியை ரத்தமும் சதையுமாய் உரித்த மொழியில் எழுதிக்காட்டிய உணர்ச்சிமிக்க…

காலா படத்திற்கு எழுத்தோட்டத்தின் பின் நிறைந்த ரசிகர்

காலா படம் ஓடிய ஐரோப்பிய நாடொன்றில் படம் தொடங்கும் வரை திரையரங்கு துணிச்சல் மிக்க நாலு பேருடனும், பகிஸ்கரிப்பு தெரியாத ஏகாந்தத்தில் இருந்தவர்களும் ஒரு சிலரும் காணப்பட்டனர். எழுத்து ஓட்டம் ஆரம்பித்ததும் சட்டென திரையரங்கு நிறைந்தது.. எங்கிருந்து வந்தார்கள்.. காருக்குள் மறைந்திருந்ததாகவும் யாராவது பகிஷ்கரிப்பில் திருப்பி அனுப்பப்பட்டால் ஓடுவதற்கு தயாராக இருந்ததாகவும் .. அசம்பாவிதம் இல்லாததால் வந்து குவிந்ததாகவும் ஒருவர் கூறியிருக்கிறார். மக்கள் ஆத்மார்த்தமாக மாற வேண்டும்.. அவர்களை திடீரென பகிஷ்கரிக்கும்படி கேட்டால் ஈழத் தமிழர்களின் படமென்றால் வீறாப்பாக பகிஷ்கரிப்பார்கள். போன் செய்து அண்ணே நான் போகவில்லை என்று போலி விசுவாசமும் காட்ட பலர் தயங்கமாட்டார்கள். ஆனால் அவர்களுடைய கனவு தலைவர்கள் படங்களுக்கு தடை வந்தால் என்ன செய்வது ஒளித்திருந்தாவது வரத்தான் செய்வார்கள். இதற்குள் இதே படத்தின் பாடலுக்கு நாளைக்கு இவர்களின் பிள்ளைகள் விழாக்களில் ஆடப்போகிறது. அப்போது…

காலா தியேட்டர் மூன்றே நாட்களில் வெறிச்சோடியது

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம், படப்பிடிப்பு தொடங்கியது முதல் ரிலீஸ் வரை பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது. அந்த எதிர்ப்புகளே படத்தின் மீதான எதிர்பார்ப்பினை எகிற செய்தது. இந்த நிலையில் காலா தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி 650 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் ,அதே நேரத்தில் உலக அளவில் 2,500 திரையரங்குகளிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில், படம் வெளியான மூன்றே நாட்களில் , பல தியேட்டர்கள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன . சேலத்தின் மையப்பகுதியில் உள்ள திரையரங்கம் ஒன்றில், நேற்று படம் பார்க்க கிட்டத்தட்ட 30 ரசிகர்கள் மட்டுமே வந்துள்ளனர். படத்தை பார்த்துவிட்டு திரும்பிய ரசிகர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, சாதாரணமாக ரஜினி படங்களுக்கு 50 நாட்கள் வரை முன்பதிவிலே டிக்கெட் பெறுவது கடினம் ஆனால், தற்போது மூன்றே நாட்களில் இப்படி வெறிச்சோடி இருப்பதை நம்ப முடியவில்லை என்கின்றனர்.…