மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கும் லைகா நிறுவனம்!

மீண்டும் பெரிய நடிகர்களுடன் இணைந்து படங்கள் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது லைகா நிறுவனம்.

‘வேட்டையன்’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்த நிறுவனம் லைகா. இந்நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தது.

ஆனால், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகள் தோல்வியை தழுவியது. இதனால் படத்தயாரிப்பினை சில காலத்துக்கு நிறுத்தியது.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தினை மட்டுமே தயாரித்து வந்தது. தற்போது இந்நிறுவனத்தின் பொருளாதார சிக்கல்கள் அனைத்து சரி செய்யப்பட்டது.

இதனால் மீண்டும் படங்கள் தயாரிப்பில் களமிறங்கவுள்ளது லைகா நிறுவனம். இதற்காக மகாவீர் ஜெயின் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது.

தொடர்ந்து ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது லைகா நிறுவனம்.

விரைவில் புதிய படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.

Related posts