ஈரான் ஜனாதிபதியின் உடல் புனித நகரமான மஷாத்தில் நல்லடக்கம்

விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்தெல்லாஹியன் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் இன்று நடைபெற்றது.

மறைந்த ஈரான் ஜனாதிபதி மற்றும் ஏனையோருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்டிருந்த அரச தலைவர்களில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டிருந்தார்.

பிர்ஜன்ட் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஈரான் ஜனாதிபதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதன்படி, 2021ஆம் ஆண்டு ஈரானின் அதிபராக பதவியேற்ற வலுவான கருத்தியல் தலைவரான ஈரான் ஜனாதிபதி ரைஸியின் இறுதிக் கிரியைகள் அவர் பிறந்த புனித நகரமான மஷாத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

Related posts