கில்லி ரீ-ரிலீஸ் : முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, ரசிகர்களால் இன்று வரை வெகுவாக கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

எப்போது பார்த்தாலும் சலிக்காத கதைக்களம், விஜய், பிரகாஷ் ராஜின் அசத்தலான நடிப்பு, வித்யாசாகரின் அதிரடியான பாடல்கள் என படத்தின் சிறப்பம்சங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இன்றும் காரில் பயணம் செய்யும் பொழுது அர்ஜுனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.

இத்திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டோடு 20 வருடங்கள் நிறைவடைகிறது. இதனையொட்டி எவர் கிரீன் படமான “கில்லி” நேற்று ரீ-ரிலீசானது. மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தை பார்க்க திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி டிக்கெட் விற்பனையை வைத்து பார்க்கும்போது முதல் நாளில் மட்டும் “கில்லி படம் உலகம் முழுவதும் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Related posts