டெல்லியில் இயக்குநர் அமீரிடம் தீவிர விசாரணை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் உடனான தொடர்பு குறித்து தமிழ் திரைப்பட இயக்குநர் அமீரிடம் டெல்லியில் உள்ள தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் நள்ளிரவு வரை தீவிர விசாரணை நடத்தினர்.
உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டியது தொடர்பான வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) போலீஸார் டெல்லியில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்தஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை மேற்கு மாவட்ட திமுகஅயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த அவர் கடந்த மாதம் 9-ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

தையடுத்து, அவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். கடந்த மார்ச்17-ம் தேதி டெல்லியில் இருந்துசென்னைக்கு விமானம் மூலம்அழைத்து வந்த போலீஸார், இங்குள்ள மண்டல அலுவலகத்தில் 12 மணி நேரத்துக்கு மேலாகவிசாரணை நடத்தினர். பின்னர், அவர் மீண்டும் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, ஜாபர் சாதிக் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அடுத்தகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அதில் முதல் கட்டமாக, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர், டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புபிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு போலீஸார் அவருக்கு கடந்த 31-ம் தேதி சம்மன் வழங்கினர்.
அதன்படி, டெல்லியின் ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில்இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் நேற்று காலை 8 மணி அளவில் ஆஜரானார்

அமீரின் வழக்கறிஞர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

நண்பகல் சுமார் 12 மணிக்கு பிறகு அமீரிடம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அவருடன் மதிய உணவு சாப்பிட்டபடியே அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை கேட்டனர். இந்த விசாரணை நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்தது.
விசாரணையில் மொத்தம்3 அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் உள்ள என்சிபி மண்டல அலுவலகஅதிகாரிகளும் இந்த விசாரணையில் கலந்துகொள்ள முன்கூட்டியே அழைக்கப்பட்டிருந்தனர்.

தலைமை இயக்குநர் விசாரணை: இறுதியாக, என்சிபி தலைமை இயக்குநர் சத்யநாராயண் பிரதான் நேரடியாக அமீருடன் விசாரணை நடத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதன் பிறகே அமீர், சென்னை அனுப்பி வைக்கப்படுவாரா அல்லது மேலும் விசாரணைக்காக டெல்லியில் தங்கி இருக்க வேண்டுமா என்று முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

‘‘அமீரிடம் ஓரளவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கிறது. இவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் அவர்சாட்சியமாக கருதப்படுவாரா அல்லது கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுவாரா என முடிவு செய்யப்படும்’’ என்றனர்.

Related posts