யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (20) வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய தாம், 3ஆம் வருட 2ஆம் அரையாண்டில் கற்கிறோம். எனவே தமது விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரியே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

……

காலிமுகத்திடலில் கோட்டா கோகமபகுதியை கசினோமையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஜேவிபியின் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரகலய இடம்பெற்ற பகுதியில் சீன பெயர் ஒன்றை கொண்ட நிறுவனம் கசினோ விடுதியை அமைப்பதற்கு அனுமதி கோரியுள்ளது அரசாங்கம் நகரஅபிவிருத்தி அதிகாரசபை மூலம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது என விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பை சேர்ந்த பிரபல சூதாட்டவர்த்தகர் இதன் பின்னணியில் உள்ளார் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

அரகலய என்பது இலங்கை வரலாற்றில் ஒரு திருப்புமுனை என தெரிவித்துள்ள விஜிதஹேரத் அரகலயவில் ஈடுபட்டவர்களை பழிவாங்குவதற்காக அரசாங்கம் இதனை செய்கின்றது இது பெருந்தவறு என குறிப்பிட்டுள்ளார்.

——

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரிய போராட்டம் ஆரம்பமானது.

குறித்த போராட்டம் 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆம்பமானது.

தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் டிப்போ சந்தி நோக்கி A 9 வீதி ஊடாக பயணிக்க ஆரம்பித்துள்ளது.

Related posts