உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிராக

மாற்றுக்கொள்கை நிலையம் இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்குஎதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

2023செப்டம்பர் 15ம் திகதி வர்த்தமானியில் வெளியான ஜனவரி 10 2024 ம் திகதியே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்பது அரசமைப்பிற்கு உட்பட்டதா என்பதை கேள்விக்கு உட்படுத்தும் மனுவொன்றை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தாக்கல் செய்துள்ளது.

பயங்கரவாததடைச்சட்டம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகியவை குறித்து பல தடவை தனது கருத்துக்களை முன்வைத்துள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் மிகவும் ஆபத்தான சட்டமூலம் குறித்த தனது கரிசனைகளை வெளியிட்டு வந்துள்ளது.

துஸ்பிரயோகத்திற்கான கருவியாக பயன்படுத்தப்படக்கூடிய இந்த சட்டமூலத்தில் காணப்படும் தெளிவற்ற வரைவிலக்கணங்கள் குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கரிசனை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியால் நீண்டகாலம் தடுத்துவைப்பதற்காக வழங்கப்படும் உத்தரவை தொடர்ந்தும் பயன்படுத்துதல் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் தடைஉத்தரவுகள் முக்கியமான பிரச்சினைகள் குறித்த தடைஉத்தரவுகளை பிறப்பிப்பதற்கான ஜனாதிபதிக்கான அதிகாரத்தை மேலும் வலுப்படுத்துதல் குறித்தும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்தகாலங்களில் அச்சத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாக காணப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புசட்ட மூலத்தை பார்க்ககூடாது என வாதிடும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறுபான்மையினத்தவர்கள் பத்திரிகையாளர்கள் மாற்றுக்கருத்துடையவர்கள் எதிர்கொண்டதுஸ்பிரயோகங்களை கருத்தில் கொள்ளும்போது எதிர்காலத்தில் அவ்வாறான துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.

எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் பயங்கரவாதத்தின் உருவாக்கத்திற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காண்பதை நோக்கமாக கொண்டு காணப்படவேண்டும் மாறாக மக்களின் ஒரு பகுதியினரை ஒடுக்குவதற்காக அரசாங்கத்தை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்க கூடாது எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவிக்கின்றது.

Related posts