தேசிய நல்லிணக்க பொங்கல்

யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் இடம்பெற்ற பொங்கல் விழாவில், வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற்றது.

——–

தைப்பொங்கல் பண்டிகையையிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) தைப்பொங்கல் விழாவில் இடம்பெற்றது.

தைப்பொங்கல் விழாவை கொண்டாடும் இவ்வேளையில், விவசாயப் பொருட்களுக்கு கூட வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரிசி உள்ளிட்ட மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக இதில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

—–

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.

வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , வைத்தியர் யமுனானந்தா, வைத்தியர்கள் , தாதியர்கள் , நிர்வாக உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

——

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை அந்த நம்பிக்கையுடன் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

”இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலக தமிழர்கள் அனைவருக்கும் அறுவடை திருவிழாவான தை பொங்கலை இன்று கொண்டாடுகின்றனர். தமிழர்களுக்கு தை பொங்கல் பண்டிகை புதிய வருடத்தின் தொடக்கமாகவும் உள்ளது. தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமான திருநாளாகவும் பொங்கல் திகழ்கிறது.

சூரியனுக்கும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்த கொண்டாடப்படுகின்ற இந்த தைப்பொங்கல் நன்நாளில் அனைவரும் அன்பு, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை மற்றும் பிறருக்கு உதவி செய்யும் நற்பண்புகளை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

தை பொங்கல் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் அனைத்து உயிர்களும் சமம் என்பதையும் போதிக்கிறது. தை பொங்கலுடன் தமிழ் மக்கள் வாழ்வில் புதிய எதிர்பார்ப்புகள் பிறக்க வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.” எனவும் தமது வாழ்த்து செய்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

Related posts