ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பில் ஆரம்பமானது.

இந்நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

இதன்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரை காமினி லொகுகே முன்மொழிந்தார். அதனை ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வழிமொழிந்தார்.

நெருக்கடியான சூழ்நிலையில் ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்காமல் தப்பிச் சென்றவர்களிடம் நாட்டு மக்கள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க போவதில்லை என மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இதேவேளை, எம் மீதான விமர்சனங்கள் ஒன்றும் புதிதல்ல எனவும் 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான சேறு பூசல்களே காணப்பட்டன எனவும் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு மஹிந்த ராஜபக்‌ஷ இதனை தெரிவித்தார்.

Related posts