இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு

இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை அறிவிக்கவேண்டும் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோள்களிற்கு பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யன் உறுதியான பதிலை வழங்கதவறியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து இடம்பெற்ற கடுமையான விவாதங்களின் போது பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யன் உறுதியான பதிலை வழங்கதவறியுள்ளார்.

கென்சவேர்ட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோர்ல்பேர்ன் அமைச்சர நோக்கி நேரடியாக பின்வரும் கேள்வியை எழுப்பினார்.

இலங்கையின் உயர் சமூகத்தை சேர்ந்த யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்களிற்கு எதிராக தடைகளை விதிப்பதற்காக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு ஆதாரங்களை ஆராய்கின்றது என சபைக்கு உறுதி செய்யுங்கள்

டிரெவெல்யன் பின்வருமாறு பதிலளித்தார்.

நம்பகதன்மை மிக்க உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயன்முறை குறித்தஇலங்கையின் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்களின் கரிசனையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் .

இந்த கரிசனைகளிற்கு தீர்வை காணுமாறு நாங்கள் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்

நான் அங்கு விஜயம் மேற்கொண்டவேளை இது குறித்த கரிசனையை எழுப்பினேன் மனித உரிமைகள் குறித்தும் நீதி விடயங்கள் குறித்தும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

Related posts