யாரோ ஒருவரது தூண்டுதலிலேயே எனது பேச்சை

பாராளுமன்றத்தில் நீதிபதிகள் எவருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. அமைச்சர் விஜேதாசவே நீதிபதிகளின் பெயரை குறிப்பிட்டிருந்தார். அத்துடன் குறித்த தினம் எனது பேச்சை செவிசாய்த்து எனக்கு பதில் வழங்கிய நீதி அமைச்சர், இரண்டு தினங்களுக்கு பின்னர் எனது பேச்சு தொடர்பில் விமர்சனம் செய்திருப்பது அவர் யாருடையதாவது தூண்டுதலால் செய்திருக்க வேண்டும் என ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (06) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நான் கடந்த சனிக்கிழமை இந்த சபையில் ஆற்றிய உரையை முழுமையாக செவிசாய்த்துவடிட்டு எனக்கு பதில் ஒன்றையும் வழங்கி இருந்தார். ஆனால் இரண்டு தினங்களுக்கு பின்னர் எனது உரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து யாடையதாவது தூண்டுதலுக்கு அல்லது தேவைக்காகவே மேற்கொள்ளப்பட்டதாகவே எனக்கு விளங்குகிறது.

அத்துடன் எனது உரையில் நான் ஒருபோது நீதிபதிகளின் பெயரை குறிப்பிட வில்லை. நீதிபதிகள் யாருடையதாவது தேவைக்கு கீழ்படிந்து தீர்ப்பு வழங்கி இருந்தால் மனசாட்சிக்கும் இறைவனுக்கும் பயப்படவேண்டும். அவர்கள் தவறு செய்திருந்தால் அதற்கான த்ண்டனை இறைவனிடம் மாத்திரமே கிடைக்கும்.

அத்துடன் எந்தவொரு நீதிபதியும் தீர்ப்பொன்றை வழங்கும்போது அது அந்த நீதிபதியின் இனம் மதம் தடையாக இருக்க முடியாது என்றே எனது பேச்சில் தெரிவித்திருந்தேன். நாட்டில் நேர்மையாக இருந்து தீர்ப்பு வழங்கக்கூடிய நீதிபதிகளும் இருக்கின்றனர். அவர்களுக்கு மரியாதை செய்கிறேன். நான் நீதிபதிகள் யாருடைய பெயரையும் குறிப்பிடாத நிலையில் அமைச்சர் விஜேதாச நீதிபதிகளின் பெயரை குறிப்பிட்டு பேசி இருந்தார்.

அத்துடன் 4 நீதிபதிகள் எனது வழக்கு விசாரணைகளில் இருந்து விலகிக்கொண்டதாகவும் அதில் நீதிபதி வசன்தா கோத்தாகொட விலகியமைக்கான காரணத்தை தெரிவித்தால் அது எனக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்திருந்தார். நான் தெரிந்தளவில் அவ்வாறான எந்த கலங்கமும் ஏற்பட காரணம் இல்லை. குறிப்பாக நீதிபதி வசன்தா கோத்தாகொட எனது அண்டை வீட்டார் என்ற விடயத்தை தவிர வேறு எந்த விடயமும் இல்லை. எனது வழக்கில் இருந்து அவர் நீங்குவது நியாயமானது.

அத்துடன் இந்த சபையில் பலரும் நீதிபதிகளின் பெயர் குறிப்பிட்டு விமர்சித்திருக்கின்றனர். அப்போதேல்லாம் அமைச்சர் விஜேதாச இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் சபையில் தெரிவிக்காத நீதிபதிகளின் பெயர்களை அமைச்சர் இந்த சபையில் தெரிவித்தமை தொடர்பில் கவலையடைகிறேன்.

அத்துடன் ஒருசில நீதிபதிகளின் செயற்பாடுகள் தொடர்பாக எமக்கு பிரச்சினை இருக்கிறது. சிரேஷ்ட சட்டத்தரணிகள் இருக்கும் எமது நாட்டில் இவ்வாறான சிலரின் நடவடிக்கைகள் காரணமாக நீதித்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால் நீதிபதிகளுக்கு நீதிமன்ற நெறிமுறை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் எனது பேச்சி தொடர்பில் ஆவேசப்பட்டு நீதிபதிகள் தொடர்பில் பேசும் அமைச்சர் விஜேதாச, இந்த சபையில் ரொஷான் ரணசிங்க மேன்முறையீட்டு நீதிபதி தொடர்பாக தெரிவித்த விடயங்களை விமர்சிக்கவில்லை. ஏனெனில் இடைக்கால நிர்வாக சபையை ரொஷான் ரணசிங்க நியமிக்கும்போது அமைச்சரின் மகனை நியமித்தார். அதனால் அப்போது வாய்மூடி இருந்தார் என்றே நினைக்கிறேன். எனவே அமைச்சர் கதைக்கும்போது சிந்து பேசவேண்டும் என்றார்.

Related posts