உலக அளவில் ரூ.520.79 கோடி வசூல் செய்த ‘ஜவான்’

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லீ.

இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார்.

‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘ஜவான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்ந்து ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் வசூல் குவித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி வாரஇறுதி நாட்களில் அதிகபட்ச வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை ‘ஜவான்’ படைத்துள்ளது.

மேலும் 4 நாட்களில் ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் 520.79 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

Related posts