பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

மணிப்பூர் வன்முறை சம்பவத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு உத்தரவிடவேண்டுமென மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தங்கள் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) தலைமையில் சுதந்திரமான சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.

வழக்குகளை மணிப்பூர் மாநிலத்திற்கு வெளியே நடத்த வேண்டும், மாநில போலீசார் மீது நம்பிக்கையில்லாததால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts