‘பரம்பொருள்’ படத்தின் டீசர் வெளியானது..!

வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அமிதாஷ் பிரதான் மற்றும் நடிகர் சரத்குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘பரம்பொருள்’.

இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை காஷ்மிரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

கவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

எஸ். பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார்.

சிலை கடத்தலை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் ‘பரம்பொருள்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts