களமிறங்குகிறார் பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன்.!

எப்போதும் இணையதளத்தில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன், தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்குகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படத்தினை இயக்குனர் செந்தில் செல்வம் இயக்குகிறார். பல முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். வரும் 29ஆம் தேதி டி.டி.எப் வாசன் பிறந்தநாள் அன்று இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது.
தொடர்ந்து அன்றே இத்திரைப்படத்தின் பட பூஜை சென்னையில் நடைபெறுகிறது. பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் இடையே, திருப்பமாக சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகமாவதை வாழ்க்கையின் புதிய பயணமாக நான் பார்க்கிறேன் டி டி எப் வாசன் தெரிவித்திருக்கிறார்.
என்னையும் கதாநாயகனாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் எனவும், தன்னுடைய புதிய சினிமா திரை பயணத்திற்கு ஆதரவு தருவார்கள் எனவும் நம்புகிறேன் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

Related posts