மாமன்னன் சர்ச்சை கதையா ?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி உள்ள ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர்.
வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
இந்த படம் சாதி அடிப்படையிலான சர்ச்சை கதையம்சத்தில் தயாராகி உள்ளதாக வலைத்தளத்தில் சிலர் விமர்சித்தனர். இதற்கு உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “மாமன்னன் சாதி பெருமை பேசும் படமாக இல்லை. சாதி மறுப்புதான் பேசி இருக்கிறது.
படத்தில் யாரையும் எதிர்மறையாகவும் காட்டவில்லை. எந்த சாதியினரையும் அவமதிக்கும் காட்சிகளும் படத்தில் இல்லை. யாரையும் தாக்கவும் இல்லை.
ஒவ்வொரு பக்கத்திலும் நியாயமும் இருக்கும். எதிர் விஷயங்களும் இருக்கும். அதற்கு படத்தில் விளக்கம் இருக்கிறது.
சந்தோஷமாகவே படம் முடியும். தணிக்கை குழுவில் படத்துக்கு எந்த பிரச்சினையும் எழவில்லை.
யுஏ சான்றிதழ் கொடுத்து உள்ளனர். மாமன்னன் படத்தில் வடிவேலுதான் ஹீரோ.
அவர் பெயர்தான் முதலில் வரும். இது அரசியல் பின்புலம் கொண்ட கதை. நான் நடிக்கும் கடைசி படமாக இது இருக்க வேண்டும் என்று கருதி நடித்தேன்.
இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன். கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஏற்கனவே முடிவு செய்து இருந்தேன்.
அதிலும் நடிக்க இயலாது என்று கூறி விலகி விட்டேன்” என்றார்.

Related posts