எந்திரன் திரைப்பட கதை திருட்டு வழக்கு..

நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன் என்ற திரைப்படத்தை 2010-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கினார். இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010–ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.1 கோடி இழப்பீடும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், ‘என்னுடைய கதைக்கும், மனுதாரரின் கதைக்கும் சம்பந்தமே இல்லை. அதில் பல வித்தியாசங்கள் உள்ளன. எந்திரன் படத்தின் கதையை ‘முத்திரையிடப்பட்ட உறையில்’ தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்தேன்.

அந்த உறையையும், இந்த கதையை காப்புரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதாகவும் அதற்கான சான்றிதழையும் இயக்குனர் ஷங்கர் சென்னை ஐகோர்ட்டில் வழங்கினார். இந்நிலையில், பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது.

அதில், எந்திரன் திரைப்பட கதைக்கும், மனுதாரரின் கதைக்கும் அதிக அளவு வேறுபாடுகள் உள்ளது என கூறி மனுதாரரின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கின் செலவை மனுதாரரே ஏற்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்துவந்த எந்திரன் திரைப்பட கதை வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

Related posts