விஜய்-யின் அடுத்த படத்தை இயக்கும் வெங்கட் பிரபு…?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், சஞ்சய்தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மிஷ்கின், சஞ்சய்தத் இருவரும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. லியோ படப்பிடிப்பு காஷ்மீர் பகுதிகளில் 2 மாதங்கள் நடந்தது. தற்போது அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர்.

பனையூர் பகுதியிலும், வடபழனியில் உள்ள ஸ்டுடியோவிலும் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வலைத்தளத்தில் பரவி வருகிறது.

ஒரு விஜய்க்கு திரிஷா ஜோடியாகவும், இன்னொரு விஜய்க்கு பிரியா ஆனந்த் ஜோடி என்றும் பேசுகின்றனர். இந்த படம் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிறது. இந்நிலையில் நடிகர் விஜயின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இயக்க உள்ளதாகவும், வெங்கட் பிரபு இயக்கினால் யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைப்பார் என்றும் தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. வெங்கட் பிரபு வித்தியாசமான கதைகளை இயக்கி வருகிறார்.

அதில் நடிகர் அஜித்தின் மங்காத்தா, சிம்புவின் மாநாடு ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.

Related posts