இந்த உயர் வர்க்க ஆட்சிக்கு மக்கள் துயர் புரிவதில்லை

மனிதாபிமானம் தெரியாத, மனிதநேயமற்ற மக்களின் வலியையும் வேதனைகளையும் புரிந்து கொள்ளாத உயர் வர்க்க ஆட்சியே தற்போது நாட்டில் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக இந்த மக்கள் விரோத ராஜபக்ச நிழல் அரசாங்கம் மக்களை மிதித்து நசுக்குவதை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வரியை அதிகரித்து, வட்டி விகிதத்தையும் அதிகரிக்கும் இந்த அரசாங்கத்திடம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை என்றாலும் தற்போதைய ஜனாதிபதியை நியமித்த 134 பேரின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகள் அவர்களிடம் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மொட்டு ஆதரவான ராஜபக்சக்களை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் நோக்கமாக இருப்பதனால், இந்த அடக்குமுறை அரசை விரட்ட மக்கள் அணிதிரள வேண்டும் எனவும், அரசாங்கத்திடம் இல்லாத மக்கள் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தியிடம் பதில் இருப்பதாகவும் இது தொடர்பில் எந்த விவாதமும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் கொழும்பு குணசிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts