கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர்

யாழ். கோப்பாய் ஆசிரிய கலாசாலையால் வெளியிடப்பட்ட கலைமலர் சஞ்சிகை யின் பிரதிகள் இருப்பின் கலாசாலை நூலகத்துக்கு வழங்கி உதவுமாறு கலாசாலையின் அதிபர் கோரியுள்ளார்.

கலாசாலை நூற்றாண்டைக் காணும் தருணத்தில் கலாசாலையுடன் தொடர்புடைய வெளியீடுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் இந்த உதவியை மேற்கொள்ளுமாறு கலாசாலையில் கற்ற முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்களிடம் அதிபர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

1923இற்கும் 1974இற்கும் இடைப் பட்ட காலத்தில் வெளிவந்த வெளியீடுகள் பற்றிய தரவுகளோ அல்லது நூல்களோ கலாசாலை நூலகத்தில் இல்லை எனவும் அத்துடன் கலைமலர் 18, கலை மலர் 19 (1977 – 1978) கலைமலர் 22 (1981) கலை மலர் 28, கலைமலர் 29, கலைமலர் 30 (1990 – 1998 இடையில்) கலைமலர் 34 (2002) ஆகிய கலைமலர் சஞ்சிகைகள் கலாசாலை நூலகத்தில் இல்லை எனவும் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரதிகள் எங்காவது இருப்பின் கலா சாலைக்கு (021 2230323 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு) அறியத் தந்தால் அவற்றை வந்து பெற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts