கவின் படத்தின் புதிய பாடல் வெளியானது..!

சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின்.

இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘டாடா’ திரைப்படத்தில் நடித்தார்.
ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் பிப்ரவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ‘டாடா’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிலேச காதலா’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts