விமான விபத்தில் 67 பேர் உயிரிழப்பு…

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
இந்த் விவாமன்ம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்ததாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். காட்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதாக தெரிகிறது.
விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா கூறுகையில், “2 கைக்குழந்தைகள் உட்பட 10 வெளிநாட்டினர் விமானத்தில் இருந்தனர்.மேலும் 53 நேபாளிகள், 5 இந்தியர்கள் 4 ரஷியர்கள் ஒரு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் 2 பேர் கொரியாவை சேர்ந்தவர்கள் (2), அர்ஜென்டினா, பிரான்ஸ் தலா ஒருவர் என மொத்தம் 67 பேர் விமானத்தில் பயணித்ததாக கூறி உள்ளார்.
இடிபாடுகளில் எரியும் தீ காரணமாக மீட்பு பணிகள் கடினமாக உள்ளது என்று நேபாள பத்திரிகையாளர் திலீப் தாபா தெரிவித்து உள்ளார்.
விபத்தை தொடர்ந்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts