டிஜிட்டலில் வரும் எம்.ஜி.ஆரின் ‘சிரித்து வாழ வேண்டும்’

எம்.ஜி.ஆர், லதா ஜோடியாக நடித்து 1974-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற ‘சிரித்து வாழ வேண்டும்’ படமும் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர உள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன், ரிக்‌ஷாக்காரன், எங்க வீட்டு பிள்ளை, ரகசிய போலீஸ் உள்ளிட்ட சில படங்கள் ஏற்கனவே டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளன.

இந்த வரிசையில் தற்போது எம்.ஜி.ஆர், லதா ஜோடியாக நடித்து 1974-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற ‘சிரித்து வாழ வேண்டும்’ படமும் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர உள்ளது.

இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடந்தது. விழாவுக்கு முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் விழாவில் கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட நடிகை லதா பெற்றுக் கொண்டார். பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் சித்ரா லட்சுமணன், பிரமிட் நடராஜன், சொக்கலிங்கம், நடிகர் மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சரத்குமார் பேசும்போது, ”எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். அவரது எந்த பாடலை கேட்டாலும் வீரியம் வந்துவிடும். ஒழுக்கத்திலும், உடல் ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனம் காட்டியவர். இன்றைக்கு ஆரோக்கியம் சீரழிந்து வருகிறது. இளைய தலைமுறையினர் இதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

எம்.ஜி.ஆர். பாடல் அனைத்தும் தத்துவம். அதை கேட்டு வாழ்ந்தாலே வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இப்போதுள்ள இளைஞர்கள் எம்.ஜி.ஆர். படங்களை பார்க்க வேண்டும். எம்.ஜி.ஆர். நடித்த படங்களை மீண்டும் திரையிட்டால் கூட்டம் அதிகமாகவே வரும்.

அதற்கான முயற்சிகள் மேற்கொண்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார் சைதை துரைசாமி பேசும் போது, “மக்கள் மத்தியில் நீடித்த புகழாய் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே தலைவர், எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் புகழை பாடுவதில் தான் எனக்கு மனநிறைவு என்பேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி.

உலகம் முழுவதும் எம்.ஜி.ஆர். புகழ் பரவி இருக்கிறது. எம்.ஜி.ஆர். ஒரு அதிசயம். உலகத்தில் தமிழர்கள் இருக்கும் இடத்தில் எல்லாம் நீக்கமற அவர் நிறைந்திருக்கிறார். ‘மனிதன் என்பவன் தெய்மாகலாம்… வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம் பாடல் வரிகளுக்கு பொருத்தமான ஒரே தலைவராக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மட்டுமே” என்றார்.

Related posts