காபி வித் காதல்’ படத்தின் வீடியோ பாடல்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடித்துள்ள திரைப்படம் ‘காபி வித் காதல்’. இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

மேலும் இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்திற்கு கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்த நிலையில், ‘காபி வித் காதல்’ படத்தின் ‘தியாகி பாய்ஸ்’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. Also Read – ‘வாரிசு’ படத்தின் முதல் பாடலின் புரோமோ இன்று வெளியீடு- ரசிகர்கள் உற்சாகம் பேரரசு வரிகளில் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி பாடியுள்ள இந்த பாடல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த திரைப்படம் நவம்பர் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரரசு வரிகளில் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி பாடியுள்ள இந்த பாடல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் நவம்பர் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts