‘சர்தார்’ படத்தின் டிரைலர் தற்போது

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சர்தார்’. இந்த படத்தில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘சர்தார்’ திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ‘சர்தார்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் கார்த்தி போலீஸ் கதாபாத்திரம் உட்பட இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts