ஆர்ப்பாட்டத்தின் போது 25 பேர் கைது

பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியினால் மருதானை டீன்ஸ் வீதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டனர்
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தின் போது 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருதானை, டெக்னிக்கல் சந்தியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியத்தினால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts