வசந்த முதலிகே அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

தாம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இன்று உயர்நீதிமன்றத்தில் அவர் சார்பில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது வசந்த முதலிகே உட்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கினார்.

இந்தநிலையில் இந்த தடுத்து வைப்பை சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள் கண்டித்துள்ளன.

Related posts