நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் டிரைலர்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சென்னை, இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது ஒரு முழுநீள காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். காதலுக்கு பின்னால் இருக்கும் அரசியலை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த டிரைலரை இயக்குனர் பா.இரஞ்சித் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், காதலுக்கு பின்னால் இந்த சமூகம் உருவாக்குற கதைகள் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts