பதக்கங்களை வென்ற அஜித் அணி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘ஏகே 61’ எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
சினிமாவை தாண்டி பைக் ரேஸ், போட்டோகிராபி, போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி அஜித் வருகிறார். திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபின் கிளப் சார்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 24-ஆம் தேதி துவங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றார். இந்நிலையில் அஜித் கலந்து கொண்டு வெற்றிபெற்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
அஜித்குமார், சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் என 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார். பதக்கங்களை குவித்த அஜித்துக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

Related posts