நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிப்பேன்- ராமராஜன்

நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிப்பேன்’ என்பதில் உறுதியாக இருக்கிறார் ராமராஜன். 1980-களில் தமிழ் சினிமாவின் பரபரப்பான கதாநாயகனாக பேசப்பட்டவர் ராமராஜன்.

அவருடைய படங்களின் வசூல் ‘சூப்பர்’ நடிகர்களை வியக்க வைத்தன. ‘கரகாட்டக்காரன், ‘ ‘தங்கமான ராசா’ ஆகிய 2 படங்களின் வசூல் ‘அந்த’ நடிகர்களின் வசூல் சாதனைகளை பின்னால் தள்ளின.

அதன் பிறகு ராமராஜன் நடித்து வந்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவின. அவர் எவ்வளவு வேகமாக உயரத்துக்கு போனாரோ, அவ்வளவு வேகமாக கீழே இறங்கினார்.

அடுத்து கதாநாயகனாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க அவருக்கு பட வாய்ப்பே வரவில்லை. மாறாக வில்லன் வேடங்களும், அப்பா-அண்ணன் வேடங்களும் வந்தன.

அந்த வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை. ஆண்டுகள் பல கடந்து வாலிபம் போய் வயோதிகரானாலும், ‘நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிப்பேன்’ என்பதில் உறுதியாக இருக்கிறார்.

‘என்றாவது ஒருநாள் அதற்கான வாய்ப்பு வரும். அதுவரை என் கொள்கையில் திடமாக இருப்பேன்’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

Related posts