ரஷ்யாவுடன் இலங்கைக்கு எந்த பிரச்சினையும் இல்லை

ரஷ்ய Aeroflot விமானம் தொடர்பான பிரச்சினை இராஜதந்திர பிரச்சினையல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்ய Aeroflot விமானம் தொடர்பான பிரச்சினை தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என்றும், இந்த விவகாரத்தை

விரைந்து தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரஷ்யாவுக்கு அறிவித்துள்ளார்.

Aeroflot விமான சேவை நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட Celestial Aviation Trading நிறுவனத்திற்கு இடையே வணிகப் பரிவர்த்தனை தொடர்பாக ஏற்பட்ட தகராறே இதற்கு காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது. ரஷ்ய விமானம் ஒன்றுக்கு சொந்தமான MSN 1301 என்ற விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட விடாது கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் அண்மையில் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Celestial Aviation Trading நிறுவனம் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜதந்திர ரீதியான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts