நல்லூர் ஆலய நிர்வாகத்தை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை!

யாழ்ப்பாணம் – நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தை போல் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை நடாத்த வேண்டும் என்று பா.ஐ.க கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவர், இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு விஐயங்களை மேற்கொண்டருந்தார்.

அவ்வகையில் யாழ்ப்பாணத்திற்கான விஐயம் ஒன்றை மேற்கொண்ட போது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று தரிசனம் மேற்கொண்டு ஆலய நடைமுறைகளை நேரில் கண்டார்.

நேற்று முன்தினம் தமிழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் கீழ்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி கோயில் 13 நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலாகும். இவ்வாலயமானது தனிஒரு அறங்காவலரால் நடத்தப்படுகிறது. அங்கிருந்த அர்ச்சகர்கள் தட்டில் காசு கொடுத்து வாங்கவில்லை. அர்ச்சனைக்கு ஒரு ரூபாய் மட்டும்தான். உண்டியலில் மட்டும் தான் பணம் போட முடியும். VIP அல்லது Non VIP என்று எதுவும் இல்லை. எல்லோருக்கும் ஒரே வரிசை தான். தமிழகத்திலும் அப்படி ஒரு சட்டம் கொண்டு வர முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

Related posts