டென்மார்க் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

டென்மார்க் பிரதமரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு உறவை வலுப்படுத்துதல், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், பயணத்தின் 2-வது நாளான இன்று பிரதமர் மோடி டென்மார்க் சென்றுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி டென்மார்க் செல்வது இதுவே முதல்முறையாகும்.

இந்திய பிரதமர் மோடியை டென்மார்க் பிரதமர் மிட்டீ ஃபெர்டிக்சென் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். இதனை தொடர்ந்து இருவரும் மரியன்போர்க் நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சென்றனர்.

அங்கு டென்மார்க் பிரதமர் மிட்டீ ஃபெர்டிக்செனும் இந்திய பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாட்டு தலைவர்கள் தலைமையில் உயர் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை நடைபெற்றது.

Related posts