உன்னதத்தின் ஆறுதல் : வாரம் 22.14

உன்னதத்தின் ஆறுதல. இரட்சிப்பின வசனம். வாரம் 22.14

அதி சீக்கிரம் நீங்கிப் போகும் !
அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான
நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. 2 கொரிந்தியர் 4.17

இந்தவாரம் வைத்தியசாலை ஒன்றில் தமிழ் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவரின் மனைவிசுகவீனமுற்று அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தாரகள். அவர் என்னிடம் எதிர்பார் த்தது, ஆறுதல்அடையக்கூடிய தேவனுடைய வார்த்தையை. நான்அவர்களிடம் கூறினேன், முழுஇருதயத்துடன் 23 ம் சங்கீதத்தை வாசித்து தேவனிடம் இருந்து ஆறுதலை அடையும்படியாக. வீட்டிற்கு வந்தபின்அவர்களைக் குறித்து சிந்தித்த வண்ணமாக இருந்தேன். அப்போது இந்த சிந்தனை ஞாபகம்வந்தது. இதனை பலருக்கு ஆறுதலாக இருக்கும் என்று எழுதுகிறேன் .

நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு நாமேதான் பொறுப்பு. அது சரி. ஆனால், உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்று இயேசு வெகு இலகுவாக சொல்லிப் போய்விட்டார். தேவவசனத்திற்கு கீழ்ப்படியுமபோது இவ்வுலகம் உபத்திரவம் கொடுக்குமென்றால், வாழ்க்கை முழுவதும் உபத்திரவம்தானா? என ஒருவர் வெறுப்படைந்தார். இன்று எமது வாழ்வு முறையிலே நமக்குள்ள பிரட்சனைகளை சீர்துாக்கிப் பார்த்தால், பல பிரட்சனைகளுக்கு நாமேதான் காரணமாக உள்ளோம் என்பது புரியும்.

நன்மையின் பாதையில் கிறிஸ்துவுடன் நடப்பதால் உபத்திரவங்கள் நேர்ந்தாலும்கூட, நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அதை உறுதியாகப் பிடித்துக்கொண்டால் எந்த உபத்திரவமும் நமக்கு சுமக்கமுடியாத சுமையாயிராமல், சுகமான அனுபவமாக மாறும். ஒரு இளம் தம்பதியினர் மிஷனறிப் பணிக்காக “ பப்புனிகெனியா “ நாட்டிற்கு சென்றனர். அந்த கணவன் பெரியவெள்ளியன்று வெட்டிக் கொல்லப்பட்டான். கணவனின் இறுதிக் கடமைகள் யாவையும் முடித்தபின், அந்த இளம்மனைவி அதே இடத்திற்கு செல்ல ஆயத்தமானாள். ” என் கணவர் தனக்கு நேர்ந்த இலேசான உபத்திரவங்களை முடித்துக் கொண்டு இளைப்பாறச் சென்றுவிட்டாள். ஆனால் இந்த ஜனங்கள் நரகத்தை நோக்கியல்லவா ஓடிக்கொண்டிருக்கிறாரகள் ” என்பதே அவளின் பதிலாக இருந்தது.

ஆம், வேத வசனம் ” அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் ” என்றே கூறுகிறது. ஆம், நமக்கு ஏற்படும் உபத்திரவங்கள் அதிசீக்கிரகத்தில் நீங்கிப்போகும். இதுவே வேத வசனம் தரும் நிச்சயம். இதை ஏன் நாம் நம்பக்கூடாது? ஆம், அது நமது சரீரக்கண்களுக்கு மிகுந்த வேதனையாகத் தெரிந்தாலும், நாம் வாழப்போகும் நித்திய வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்போமானால் இந்த உபத்திரவங்கள் ஒன்றுமேயில்லை என்பது புரியும்.

தேவனுக்குப் பிரியமானவர்களே, எப்போதும் நமது கண்ணோட்டம் தேவனையே நோக்கிப் பார்க்க வேண்டும். நாம் வாழப்போகும் நித்தியத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். எந்தவொரு காரியத்தைச் செய்தாலும், வேதனைக்குள் தள்ளப்பட்டாலும் இது என் நித்திய வாழ்விற்கு ஏற்புடையதா? நித்தியத்தைச் சென்றடைய இந்த சர்ந்தப்பம் எனக்கு உதவுமா என்ற கேள்வியைக் கேட்டுப்பார்க்க பழகவேண்டும். அது நமது வாழ்வில் எவ்வளவு மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டுவரும் தெரியுமா? நமக்கேன் வீண் தோல்விகளும் விழுகைகளும்? நாம் தேவனோடு வாழ வேண்டியவர்கள் என்பதை எந்நிலைமைகளிலும் மறந்துவிடக் கூடாது. இந்த விழிப்புணர்வு நம்மை தீமைக்கு விலக்கிக்காக்குமே.

இதனையே இயேசு சிலுவையிலே முன்மாதிரியாக நிறைவேற்றி காண்பித்தார். நாமும், அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் இலேசான உபத்திரவத்திலே நான் உறுதியாக நிலைத்து நின்று வெற்றிபெற கிருபைதாரும் பிதாவே என வேண்டிக்கொள்வோம்.

இந்த பாஸ்காக காலத்தில் இந்த உண்மையை அறிந்து கொள்வதோடு மட்டுமல்ல, அவரைவிசுவாசித்து அவரின் பாதுகாப்புக்குள் வருவோம்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark

Related posts