இலங்கையின் நெருக்கடி நிலை கூட்டு அறிக்கை!

இலங்கையின் நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கை பின்வருமாறு…
இலங்கையின் அண்மைய அபிவிருத்திகள் பற்றிய கூட்டு அறிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான (ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா) மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும ஐக்கிய இராச்சியம் மையங்களுடன் இணைந்து பின்வரும் அறிக்கையை வெளியிடுகிறது.

ஒன்று கூடும் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் அமைதியாக நடைபெறும் சந்தர்ப்பத்தில், அவை எந்த ஒரு ஜனநாயக சமூகத்தினதும் தூண்களாகும். எனவே அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் தொடர்ந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கிறோம். அத்துடன், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஒரு நேர்மறையான முன்னெடுப்பாக நாம் கருதுகிறோம்.

இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையானபாதைக்கு கொண்டு வருவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் தீர்க்கமான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டிய நிலைமையின் தீவிரத் தன்மையை நாம் வலியுறுத்துகிறோம்.

—-

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அததெரண பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

Related posts