நயன்தாராவின் பெற்றோருடன் விக்னேஷ் சிவன்

நயன்தாராவின் அப்பா,அம்மா உடன் விக்னேஷ் சிவன் அமர்ந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா , விஜய் சேதுபதி , சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள ” காத்துவாக்குல ரெண்டு காதல் ” திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் நயன்தாரா தனது தந்தையின் பிறந்தநாளை சமீபத்தில் குடும்பத்துடன் கொண்டாடினார். பொதுவாக நயன்தாரா தனது பெற்றோருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவருவது அரிதான ஒன்றாகும்.

ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் நயன்தாராவின் அப்பா மற்றும் அம்மா இருவருக்கும் இடையே விக்னேஷ் சிவன் அமர்ந்துள்ளார். நயன்தாரா அவரது அப்பாவின் மற்றொரு பக்கம் அமர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts