வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்தது ஏன்?

ஆஸ்கர் விருது : வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்தது ஏன்?

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தைப் பற்றி நகைச்சுவையாகப் பேசினார்.

உண்மையில், நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். அந்த நகைச்சுவையைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை அறைந்தார்.

ஜடா பிங்கெட்டின் குட்டையான முடி குறித்து கிறிஸ் ராக் கருத்து தெரிவித்து மேடையில் பேசினார்.

ஜி.ஐ ஜேன் 2. படத்தில் கதாநாயகி தனது தலையை மொட்டையடித்தபடி நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்துடன் ஜடாவை ஒப்பிட்டு கிறிஸ் ராக் கிண்டல் செய்து பேசியபோது, பார்வையாளர்கள் வரிசையில் சிரிப்பலை எழுந்தது. ஜிஐ ஜேன் 1997ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம். இதில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை டெமி மூர் படத்திற்காக மொட்டையடித்துக்கொண்டு நடித்தார்.

அவர்களில் ஒருவராக வில் ஸ்மித் அருகே அமர்ந்திருந்த ஜடாவின் கண்கள் திடீரென மாற்றம் அடைந்தது. அது கிறிஸ் ராக்கின் கருத்தை அவர் ரசிக்கவில்லை என்பது போல உணர்த்தியது.

இந்த நிலையில், திடீரென்று மேடைக்கு வில் ஸ்மித் ஏறியபோது தன்னை பாராட்ட அவர் வருவதாகவே கிறிஸ் ராக் கருதி பேசினார். ஆனால், மேடையில் அவர் அருகே சென்றதும் ஓங்கி அறை விட்டு விட்டு மீண்டும் பார்வையாளர் பகுதியில் தனது மனைவியுடன் வில் ஸ்மித் அமர்ந்தார். அப்போது வில் ஸ்மித் பற்றி கிறிஸ் ராக் பேசியபோது, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி எனது மனைவியை பற்றி உன்னுடைய வாயால் எதையும் பேசாதே என்று உரக்க குரல் கொடுத்தார் வில் ஸ்மித்.’’

இந்த நிலையில், வில் ஸ்மித்திடம் கன்னத்தில் அறைவாங்கியபோதும் அந்த சூழலை இயல்பாக்கிக் கொள்ள முயன்ற கிறிஸ் ராக், “தொலைக்காட்சி வரலாற்றில் இது சிறந்த இரவாக இருக்கும்,” என்று கூறினார்.

50 வயதாகும் ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டு வருபவர். இதை 2018இல் ஒரு நிகழ்ச்சியில் அவரை வெளிப்படுத்தியிருந்தார்.

ஜடா பிங்கெட் பல நேர்காணல்களில் தமது முடி உதிர்தல் நோய் பாதிப்பு பற்றிய பிரச்னையை பேசியிருக்கிறார். அதன் காரணமாகவே தமது தலையை மொட்டையடிக்கும் கட்டாயம் எழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

விருது வாங்க மேடை ஏறிய வில் ஸ்மித் விருது பெற்றதும் கிறிஸ் ராக்கை அடித்ததற்காக கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டார்.

வில் ஸ்மித் பேசும் போது கூறியதாவது:-

நான் ஆஸ்கர் அகாடமியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இது ஒரு அழகான தருணம், விருதை வென்றதற்காக நான் அழவில்லை. நாம் கலையை நேசிக்கிறோம். ரிச்சர்ட் வில்லியம்ஸைப் பற்றி அவர்கள் கூறியது போல் நான் பைத்தியக்கார தந்தையைப் போல் இருக்கிறேன். காதல் உங்களை பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்ய வைக்கும்.

மக்களை நேசிக்கவும், மக்களைப் பாதுகாக்கவும், என் மக்கள் பயணம் செய்யும் ஒரு நதியாக இருக்கவும் என் வாழ்க்கையில் நான் விரும்புகிறேன். நாம் செய்வதையே எனக்கும் செய்யத் தெரியும். மக்கள் உங்களைப் பற்றி பைத்தியமாக பேசுவதற்காக நீங்கள் நடிக்க வேண்டும். இந்த தொழிலில் உங்களை அவமரியாதை செய்யும் நபர்களும் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் சிரிக்க வேண்டும், அது சரி என்பது போல் நடிக்க வேண்டும். இது தான் நமது தொழிலின் முன் உள்ள சவால்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts