ரஷிய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்கள் பறக்க தடை

ரஷிய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியாவுக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து பொருளாதார தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் தரையிறங்கவோ அல்லது வான்வெளியைக் கடக்கவோ ரஷியா தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட விமானங்களுக்கு வான்வெளியை மூடியது ரஷியா. பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்து கூறிய நிலையில் ரஷியா நடவடிக்கை எடுத்துள்ளது.

—–

இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், நிலைமையை சரியாக கையாண்டிருந்தால் உக்ரைனில் தற்போது உள்ள சூழ்நிலை ஒருபோதும் வந்திருக்காது. எனக்கு விளாடிமிர் புதினை (ரஷிய அதிபர்) நன்றக தெரியும். அவர் தற்போது செய்யும் செயலை (உக்ரைன் மீதான தாக்குதல்) டிரம்ப் அரசாங்கம் (டிரம்ப் அதிபராக) இருந்திருந்தால் நிச்சயம் செய்திருக்கமாட்டார்.

ஆனால், தற்போது போர் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. புதின் தனக்கு என்ன வேண்டுமோ அதை தற்போது பெறுவது மட்டுமின்றி கச்சா எண்ணெய் விலை உயர்வதால் மேலும் பணக்காரராகிக்கொண்டிருக்கிறார்’ என்றார்.

Related posts