“சினிமா தேசியக் கொள்கை” பிரதமரிடம் வழங்கிவைப்பு

அரச திரைப்பட ஆலோசனை சபையினால் தொகுக்கப்பட்ட ´சினிமா தேசிய கொள்கை´ அதன் ஆலோசனை குழுவினால் இன்று (24) அலரிமாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டது.

தேசிய திரைப்படக் கொள்கையை உருவாக்குவதன் முக்கிய நோக்கம் இலங்கையின் தேசிய திரைப்பட ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவை நிறுவுவதே ஆகும் என அரச திரைப்பட ஆலோசனைக் குழுவின் தலைவர் காமினி வேரகம தெரிவித்தார்.

திரைப்படத்துறையை ஒரு தொழிலாக வலுப்படுத்தி சுதந்திரமான வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குதல், வசதிகளை ஏற்படுத்தல், தரநிலைகள், அளவுகோல்களை நிர்ணயித்தல் மற்றும் இலாபம் அனைத்து தரப்பினருக்கும் பாரபட்சமின்றி பகிரப்படுவதற்கு அனுமதிப்பது உள்ளிட்ட பத்து நோக்கங்கள் இதில் முக்கியமாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, அரச திரைப்பட ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தி தலைவர் காமினி வேரகம, ஜயந்த சந்திரசிறி, அருண லொகுலியன, நதீகா குணசேகர, அருண குணரத்ன, ராஜ் ரணசிங்க மற்றும் அருண பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மஹிந்த இலேபெரும உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts