வின்டேஜ் விக்ரம்… ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகான்’. லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. ‘மகான்’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஷ்ரேயஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் ஆகியோர் பணிபுரிந்துளனர். இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வரும் பிப்.10ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. இன்று (பிப் 03) ‘மகான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Related posts