மீண்டும் வெப் தொடரில் சமந்தா

பேமிலி மேன் 2 வெப் தொடரை எடுத்த ராஜ், டிகே ஆகியோர் இன்னொரு புதிய வெப் தொடரை இயக்க உள்ளனர். இந்த தொடரிலும் சமந்தாவை கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா ‘பேமிலி மேன் 2‘ வெப் தொடரில் இலங்கை தமிழ் போராளியாக நடித்து உலக அளவில் புகழ் பெற்றார். விருதுகளும் கிடைத்தன. இந்த தொடரில் ஈழ தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி இருப்பதாக சமந்தாவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. தொடரில் சில காட்சிகளில் சமந்தா அதிக கவர்ச்சியாக நடித்து இருந்தார். இதனாலேயே அவரது சொந்த வாழ்க்கையில் புயல் வீசி கணவரை விவாகரத்து செய்யும் நிலைமை ஏற்பட்டதாகவும் வலைத்தளங்களில் தகவல் பரவியது.

பேமிலிமேன் 2 தொடரால் சமந்தாவுக்கு இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன. இந்த நிலையில் பேமிலி மேன் 2 வெப் தொடரை எடுத்த ராஜ், டிகே ஆகியோர் இன்னொரு புதிய வெப் தொடரை இயக்க உள்ளனர். இந்த தொடரிலும் சமந்தாவை கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். நாயகனாக பிரபல இந்தி நடிகர் வருண் தவான் நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Related posts